tamilnadu

img

தாய்மாமாவுக்கு பதவி வழங்கிய ஜெகன்மோகன்

அமராவதி:
திருப்பதி தேவஸ்தானத்தின் தலைவராக சுப்பா ரெட்டி நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர், ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் என்பதுடன், ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் தாய் வழி மாமா என்பதும் குறிப்பிடத்தக்கது. நியமன பதவியான திருப்பதி தேவஸ்தானத் தலைவர்பொறுப்பு, கேபினட் அந்தஸ்து கொண்டதாகும். மிகவும் செல்வாக்கு மிக்க
பொறுப்புகளில் ஒன்றாக ஆந்திராவில் தேவஸ்தான தலைவர் பொறுப்பு விளங்குகிறது.